கனேடிய
தமிழ் வானொலி பத்திரிகை துறையின் முன்னோடிகளில் ஒருவரும் நாடறிந்த பிரபல
சமூக சேவையாளருமான குலத்துங்கம் மதிசூடி மறைந்து ஓராண்டு நிறைவு
நினைவஞ்சலி அம்பாறையில் நேற்று வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
வீரச்சோலை
வீரமுனை மற்றும் சொறிக்கல்முனை ஆகிய இடங்களில் வலுவற்ற பெண் தலைமை
தாங்கும் குடும்பங்களுக்கு ஒரு தொகுதி உலருணருவுப்பொருட்களும்
உடுதுணிகளும் வழங்கப்பட்டன.
சமூக செயற்பாட்டாளர் கி.ஜெயசிறிலின் ஏற்பாட்டில் இந் நிகழ்வு இடம் பெற்றது.
யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த திரு. குலத்துங்கம் மதிசூடி கனடாவில் ஓராண்டுக்குமுன் கனடாவில் அகால மரணமடைந்தார் .
பிரபல சமூக சேவையாளர் மதிசூடி கடந்த 40 வருடங்களாக கனடாவில் வாழ்ந்து வந்தவர்.
அவ்வப்போது இலங்கைக்கு வந்து பலவிதமான சமூக சேவைகளை வடக்கு கிழக்கில் வழங்கி வந்தவர்.
தாம்
பிறந்த மண்ணை வெகுவாக நேசித்த தமிழினப் பற்றாளர் திரு.மதிசூடி கொரோனா
காலகட்டத்திலும் வெள்ள அனர்த்த காலகட்டத்திலும் இங்கு வந்து பாரிய சேவைகளை
செய்தவர்.
அது மாத்திரமல்ல ஒவ்வொரு வருடமும் வந்து நலிவுற்ற மக்களுக்கு நேரடியாகச் சென்று உதவி செய்து வந்தவர்.
ஆன்மீகத்திலும்
அதிக ஈடுபாடு கொண்டவர். அன்பான முறையில் அடக்கமாக சில ஆலோசனைகளை வழங்கி
சிறப்பித்து பல ஆக்கபூர்வமான பல திட்டங்களிலும் ஒத்துழைத்தவர்.
பங்கெடுத்தவர் .
அவர் தமிழினத்தின் மிகுந்த பற்றாளராக விளங்கியவர். கனடாவில் கடந்த 40 வருடங்களாக தாயக மக்களின் உணர்வுகளை விளங்கிடச் செய்தவர்.
அன்னார் விட்டபணிகளை தொட்டு செல்வதே எம்மவர் அவருக்கு செய்யும் நன்றிக்கடன் ஆகும் என்று அங்கு கூறப்பட்டது.
( வி.ரி.சகாதேவராஜா)










