யுத்தத்தின்போது வடக்கு கிழக்கில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கு சுதந்திரமாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமைக்காக அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிப்பதாக, இராசமாணிக்கம் சாணக்கியன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இரண்டாவது தடவையாக, தற்போது இந்த மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.இதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு நாம் நன்றி கூற வேண்டும்.பட்டஜட் விவாதத்தில் நேற்று (27) உரையாற்றிய சாணக்கியன் எம்.பி.
வடக்கு,கிழக்கு முழுவதும் மக்களுக்கு சுதந்திரமான முறையில் தமது அஞ்சலியை செலுத்தும் வாய்ப்பை இந்த அரசாங்கம் வழங்கியுள்ளது. இதனால், வடக்கு, கிழக்கு முழுவதும் எமது மக்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை சுதந்திரமானமுறையில்நடத்தி வருகின்றனர்.குழப்பமான சூழலில் மக்கள் அச்சுறுத்தப்படும் போதெல்லாம், நாம் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் மக்கள் பிரதிநிதியாகவும் மக்களோடு மக்களாக அஞ்சலி நிகழ்வுகளில் கலந்துகொண்டோம்.கார்த்திகை 27 ஆம் திகதிமாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.இந்த வாரத்தில் எமது மண்ணுக்காகவும் மண்ணின் விடுதலைக்காகவும், தமிழ் மக்களின் எதிர்காலத்திற்காகவும் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த சகல மாவீரர்களுக்கும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன். எவ்வாறாயினும் இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற்கு கோரிக்கை ஒன்றை முன்வைக்க வேண்டும். அரசாங்கங்கள். ஆட்சிக்கு வருகின்ற முதல் இரண்டு வருடங்களில் இவ்வாறான நினைவேந்தல் அஞ்சலிக்காக அனுமதி வழங்கப்படும்.அதன் பின்னர் அந்த அஞ்சலி நிகழ்வுகளை முன்னின்று ஏற்பாடு செய்தவர்களை அடையாளம் கண்டு, கடைசி இரண்டு வருடங்களில் அவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்தல், விசாரணை செய்தல் மற்றும் சிறைத்தண்டனை வழங்குதல் என்பன கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளன.அந்த வகையில் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக் காலத்தில் முதல் இரண்டு வருடங்களில் நடந்தது போலவே,யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வழங்கியுள்ள வாய்ப்புக்காக நன்றி கூற வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.





