மட்டக்களப்பு வவுணத்தீவு பிரதேசத்தில் உப மின் நிலையங்களுக்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 


பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவுறுத்தியுள்ளது. 

பாதுகாப்பு நடவடிக்கையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது.

இந்நிலையில் ரன்தம்பே மற்றும் மஹியங்கனை இடையே உள்ள 132 கிலோவோட் மின் பரிமாற்ற மார்க்கத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக, மஹியங்கனை, அம்பாறை மற்றும் வவுணத்தீவு ஆகிய உப மின் நிலையங்களுக்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோளாறைச் சரிசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் மின் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.