
சைவத் தமிழ் மன்றத்தின் அகில இலங்கை சைவ பண்டிதர் சபையினால் நடத்தப்பட்ட 2025ம் ஆண்டுக்கான இளஞ்சைவ பண்டிதர் பரீட்சையில் குலசிங்கம் கிலசன் சித்தியடைந்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளியை பிறப்பிடமாகவும் சேனைக்குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் விவசாய திணைக்களத்தில் பணியாற்றி வருவதுடன் கலைத்துறை போலவே சைவத்தையும் தமிழையும் நேசிப்பவர் என்பதால் அறிவிப்புத்துறை, இலக்கியத்துறைக்கு அப்பால் சொற்பொழிவுகளூடாகவும் சைவத்தோடும் தமிழோடும் பயணிப்பவர் என்ற வகையில் கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் ஊடக இணைப்பாளராக இதுவரை 70 இற்கும் மேற்பட்ட ஆலயங்களில் சொற்பொழிவாற்றியுள்ளார். தனது சைவத்தமிழ் பணியை மேலும் தொடர இளஞ்சைவ பண்டிதர் பரீட்சையில் தோற்றி அதில் சித்தியடைந்துள்ளார்.
அண்மையில் இவருக்கு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இளங்கலைஞர் விருது ஊடகத்துறைக்காக வழங்கி வைக்கப்பட்டதுடன் அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் பொருளாளராகவும் செயற்பட்டு வருகிறார்.
கிலசனது துணைவியார் பவித்ராவும் இப்பரீட்சையில் சித்தி பெற்று இளஞ்சைவ பண்டிதராக தெரிவாகியுள்ளார். 330 விண்ணப்பதாரிகள் இப்பரீட்சைக்கு தோற்றிய போதிலும் 30 பேர் மட்டுமே சித்தியடைந்துள்ளனர். அதேவேளை சைவ பண்டிதர்களாக தருமராசா ஷர்மிதன், திருமதி.குஞ்சரா விஷ்ணுராசா ஆகியோரும் சித்தியடைந்துள்ளனர்.
இளஞ்சைவ பண்டிதர்களாக திருமதி.சத்தியவேல் சாந்தினி, செல்வி.பாக்கியராசா மதிவதனி, செல்வி.மிதுஷாலினி பாலச்சந்திரன், திருமதி.சிவக்கவுரி கமலேஸ்வரன், திருமதி.வதனராணி கலைச்செழியன், திரு.கேசவன் லக்சுமன், செல்வி.தம்பிராஜா ஷதுர்சனா, செல்வி.முத்துக்குமார் நிலாயினி, செல்வி.லக் ஷிகா அருச்சுனன், திருமதி.அன்னலெட்சுமி வேலாயுதம்,
திருமதி.பத்மராஜ் திருச்செல்வி, திரு.பாலகிருஷ்ணன் மதியழகன்,
செல்வி.இராசதுரை நித்தியவதனி, செல்வி.சிறிதரன் சியாமசங்கவி, திரு.சிவகுமார் பிரம்மா ரிஷாந்தன்,
திருமதி.சந்தியா சுரேந்திரன்,
திருமதி.கனகமணி சபாலிங்கம்,
சிவசிறி.நாகராஜ் மனோரஞ்சித்குமார், செல்வி.திருப்பதி சந்தோசா, திரு.குலசிங்கம் கிலசன் , திருமதி.பவித்ரா தெய்வநாயகம் , திருமதி.விக்ரராஜசிங்கம் சிவலோகநாயகி, செல்வி.சிவசுப்பிரமணியம் ஸ்ரீ கௌரி, செல்வி.விஜயகுமார் ரோசாந்தினி, சாஸ்த்திரி செல்வி.செல்வநாயகம் வதனி, செல்வி.பத்மநாதன் கிரிஜா, செல்வி.பிரகாஷ்குமார் மிதுஷா, செல்வி.பன்னீர்செல்வம் லெச்சுமி,
செல்வன்.விஜயகுமார் லிங்கேஸ்வரன்,
திருமதி.விமலா கிருபைராஜா ஆகியோரும் சித்தியடைந்துள்ளனர்.
இப்பரீட்சைகள் தமிழ்மொழியும் இலக்கியமும், சைவசித்தாந்தம், திருமுறையும் தோத்திரங்களும், வரலாறு, சைவப்பண்பாடு என்னும் ஐந்து பாடங்களில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
2026ம் ஆண்டுக்கான விண்ணப்பங்களும் கோரப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் இப்போதே விண்ணப்பிக்க முடியும்.




