மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவாநந்தா வித்தியாலயத்தில் மருத்துவ முகாம்- 2025


 
































































மட்டக்களப்பு கல்லடி உப்போடை   சிவாநந்தா வித்தியாலயத்தில்  மருத்துவ முகாம்-  2025

 
“எம்மவர்களால் எம்மவர்களுக்கான மருத்துவ முகாம் 2025” எனும் தொனிப்பொருளில் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டிலும்
சிவாநந்தா வித்தியாலய மருத்துவ பிரதிநிதிகளின் நிதி அனுசரணையுடனும்,  சிவாநந்தா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில்      மருத்துவ முகாம் ஒன்று 2025.11.07-அன்று முன்னெடுக்கப்பட்டது 
 
 சிவாநந்தா  பாடசாலையில் கல்வி கற்ற மருத்துவர்கள் மற்றும் வைத்திய நிபுணர்கள் தங்களது தாய்ப்பாடசாலைக்கும் சகோதரப் பாடசாலையான விவேகானந்தா வித்தியாலய  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும்  இலவச மருத்துவ சேவையை வழங்கினர்.

நிகழ்வின் போது  மருத்துவராக பணியாற்றும்  பழைய மாணவர்கள் கௌரவிக்கப்பபட்டதுடன் 
மருத்துவ முகாமில்  பழைய மாணவர்கள்  ஒன்று கூடியிருந்தனர். 
 கல்வி கற்றுக்கொண்டிருக்கும்  மாணவர்களை ஊக்குவிக்கும் நிகழ்வாக அமைந்திருந்தது .
1997 சக மாணவர்களால் வைத்திய நிபுணர் ,பேராசிரியர் மயூரதன்  கௌரவிக்கப்பட்டார் .
 தங்கள் பணி நெருக்கடி மத்தியிலும் அர்ப்பணிப்புடன் கலந்து கொண்டு வைத்திய முகாமில்   சேவையாற்றிய 
மருத்துவ ஆலோசகர்கள், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் பழைய மாணவர் சங்கத்தினர் தமது நன்றிகளை தெரிவித்து கொண்டனர். 

மருத்துவ முகாம்  சிறப்பாக நடை பெற  ஒத்துழைப்பு வழங்கிய மட்டக்களப்பு  வலயக்கல்வி பணிப்பாளர் – திரு.T. ரவி,
பிராந்திய சுகாதார பணிப்பாளர் – வைத்தியர் முரளீஸ்வரன்,
 பிரதி வலய கல்வி பணிப்பாளர் – சிவாந்தியன் திரு. ஹரிஹரராஜ், 
 பாடசாலை அதிபர் – திரு. தயாபரன்,
பிரதி அதிபர்கள் – திரு. குலேந்திரகுமார்,  திருமதி. யாழினி தனுஷன்
 பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் – திரு. S ரவீந்திரன் ஆகியோருக்கும்  சங்கத்தினர் விசேட நன்றியை கூறிக்கொண்டனர் .


வைத்தியர். அகிலன் – பொது வைத்திய நிபுணர் – 1986 உயர்தர பழைய மாணவர் 
வைத்தியர். கலைச்செல்வன் – பல் வைத்தியர் – 1986 உயர்தர பழைய மாணவர் 
 வைத்தியர். தமிழ்வாணன் – தோல் நிபுணர் – 1987 உயர்தர பழைய மாணவர் 
வைத்தியர். கிருஷாந்தி – பல் சத்திர சிகிச்சை  நிபுணர் – 1989 உயர்தர பழைய மாணவர் 
 வைத்தியர். விவேகானந்தன் – 1990 உயர்தர பழைய மாணவர் 
 வைத்தியர். இளங்குமரன் – 1990 உயர்தர பழைய மாணவர் 
 வைத்தியர். பிரணவன் – சத்திர நிபுணர் – 1993 உயர்தர பழைய மாணவர் 
வைத்தியர். யாழினி – பல் சத்திர  சிகிச்சை  நிபுணர் – 1996 உயர்தர பழைய மாணவர் 
 பேராசிரியர். மயூரதன் – பொது வைத்திய நிபுணர் – 1997 உயர்தர பழைய மாணவர்  
 வைத்தியர். M.அஸ்கர் – 1999 உயர்தர பழைய மாணவர் 
வைத்தியர். விஜயகாந்த் – குழந்தை நல மருத்துவ நிபுணர் – 2004 உயர்தர பழைய மாணவர் 
வைத்தியர். 
பிரவின்சன் – பொது வைத்திய நிபுணர் – 2007 உயர்தர பழைய மாணவர்  
 வைத்தியர். பாசில் – பெண்கள் நல வைத்திய  நிபுணர் – 2009 உயர்தர பழைய மாணவர் 
மேல் பட்டியலிடப்பட்ட  விசேட வைத்திய நிபுணர்கள் & வைத்தியர்கள்  
மருத்துவ முகாமில் பங்கேற்றிருந்தனர் 

தாதிய உத்தியோகத்தர்களான 
2000 உயர்தர பழைய மாணவர்  சிவாநந்தியன் திரு . ஜெகநீதன்
2000 உயர்தர பழைய மாணவர்  சிவாநந்தியன் திரு.  விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர் 
மருத்துவ முகாமில்  சுமார் 450 பேர் பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .