ஆயுர்வேத மருத்துவர்களை புதிய நிலையங்களுக்கு இணைத்தல் .























பொதுச் சேவை ஆணைக்குழுவின் சுகாதார  செயலாளர் அவர்களினால் வழங்கப்பட்ட இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவையின் ஆரம்ப தர மருத்துவர்களுக்கான நியமனக் கடிதத்தின் பிரகாரம்   

  நாவின்ன, ஆயுர்வேத திணைக்கள ஆணையாளர் அவர்களது கடிதம் மற்றும், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் அவர்களின் கடமை நிலைய இணைப்பு பட்டியல் மூலம்  ஆயுர்வேத வைத்தியர்களுக்கான கடமை நிலையங்கள் வழங்கப்பட்டு,  07.11.2025 ந் திகதி எமது மட்டக்களப்பு, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் 25 ஆயுர்வேத மருத்துவ வைத்தியர்களுக்கான  கடமை நிலையங்களுக்கு இணைக்கப்பட்ட கடிதங்களை பிரதி பிராந்திய  சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களினால் வழங்கப்பட்டது.

இதன்போது திட்டமிடல் வைத்திய அதிகாரிகள் மற்றும் நிருவாக உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்