"சொந்தமாக இருக்க இடம் ஒரு அழகான வாழ்க்கை"தேசிய வீட்டு வசதி திட்டம் -2026.










 

 









 



























 "சொந்தமாக இருக்க இடம். ஒரு அழகான வாழ்க்கை"என்னும் தொனிப்பொருளுடன்   தேசியவீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் நடமுறைப்படுத்தப்படும்  வீடமைப்பு வேலைத் திட்டத்திற்கான காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வுவானது  மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி.தெட்சணகெளரி தினேஸ் அம்மணி அவர்களின் தலைமையில் 12. 3. 2026 இன்று காலை 9.30 மணிக்கு இடம் பெற்றது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமாகிய கந்தசாமி பிரபு , வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் தங்கத்துரை சுபாஸ்கரன் , வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கணக்காளர் A.Z.ஹிசைன் , பிரதேச சபை உறுப்பினர்கள் , பிரஜாசக்தி உறுப்பினர்கள் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் கலந்து கொண்டிருந்தனர்.

பிரதேச செயலக பிரிவில் இருந்து  24 பயனாளிகள்   தெரிவு செய்யப்பட்டு வீட்டு வேலைகளை ஆரம்பிப்பதற்கான முதல்க் கட்ட கொடுப்பனவுக்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரினாலும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தரினாலும் இவ்வீட்டுத்திட்டம் தொடர்பான தெளிவூட்டல் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.