மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் அழகியல் கண்காட்சி குறிஞ்சாமுனை சக்தி வித்தியாலயத்தில் நடைபெற்றது.

 



மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் அழகியல் கண்காட்சி குறிஞ்சாமுனை சக்தி வித்தியாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி சங்கரி கங்கேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி தே. உதயகரன், உதவிக்கல்விப் பணிப்பாளர்களான திருமதி உ. விவேகானந்தம், எஸ். சக்திதாஸ், கணக்காளர் வி. கணேசமூர்த்தி ஓய்வுபெற்ற சித்திரப்பாட உதவி கல்விப் பணிப்பாளர் க. சுந்தரலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

இதன் போது மட்டக்களப்பு மேற்கு வலய பாடசாலைகளின் மாணவர்கள், ஆசிரியர்களினால் வரையப்பட்ட சித்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. நடன மாணவர்களின் நடன உபகரணங்கள், ஒப்பனை பொருட்கள் போன்றனவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

முதன்முறையாக வலயமட்டத்தில் ஒழுங்கு செய்து நடாத்தப்பட்ட அழகியல் கண்காட்சி இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை வலய அழகியல் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது.

இக்கண்காட்சியை வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் மாணவர்கள் வருகை தந்து பார்வையிட்டனர்.