மட்டக்களப்பு சிவானந்தா பாடசாலையின் Vectors கழக உருவாக்கம் தொடர்பான கலந்துரையாடல் .












 மட்டக்களப்பு சிவானந்தா பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் சிவாநந்தியன் திரு.   நா.தினேஷ்குமார் அவர்களின் தலைமையில் 2025.11.8அன்று  ஆரம்பிக்கப்பட்டது . 
சிவாநந்த வித்தியாலயத்தில் 9,10,11ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் கணித, விஞ்ஞான அறிவினை வழக்கும் நோக்கமாக கொண்டு Vectors கழகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
 கல்லடி உப்போடை துளசி கலாச்சார அரங்கில் இடம் பெற்ற    நிகழ்வில் சிவாநந்த பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் நூற்றாண்டு விழா குழுவின் தலைவருமான சிவாநந்தியன் திரு.V. வாசுதேவன், பிரதி கல்வி பணிப்பாளர் சிவாநந்தியன் திரு. ஹரிஹரராஜ், பிரதி அதிபர் திருமதி யாழினி தனுசன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் சிவாநந்தியன் திரு.S. ரவீந்திரன்,  கல்லடி உப்போடை பேச்சியம்மன் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய நிர்வாக  சபை தலைவர் சிவாநந்தியன் திரு  K. கருணேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

 நிகழ்வில் வசதிப்படுத்துனர்களாகவும் Vectors கழகத்தின் ஆலோசர்களுமான  யாழ் பல்கலைக்கழக கணித்துறை பேராசிரியர் சிவாநந்தியன் திரு. M. தணிகைச்செல்வன், பௌதீகவியல் ஆசிரியர் சிவாநந்தியன் திரு. M சிவகுமார் , கொழும்பு பல்கலைக்கழக கணித துறை நெறிப்படுத்துணர் சிவாநந்தியன் திரு. N. சொரூபன் ஆகியோர் நிகழ்வினை நெறிப்படுத்தினர். 
இவ்  நிகழ்வில் பெற்றோர்கள் அதிக கரிசனையுடன் கலந்துகொண்டிருந்தனர் கழகத்தின் பெற்றோர்களின் பிரதிநிதிகளாக , சிவாநந்தியன் திரு. சுதர்சன், சிவாநந்தியன் வணக்கத்துக்குரிய கிரிதரசர்மா, சிவாநந்தியன் திருமதி தர்ஷினி, திருமதி லாவண்யா மற்றும் திருமதி. பிரேமலதா ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர். 


சிவானந்தா பாடசாலையின் 2000 O/L & 2003ம் ஆண்டு A/L வகுப்பை சேர்ந்த பழைய மாணவரான சிவாநந்தியன் திரு. M. தணிகைச்செல்வன் அவர்கள் பேராசிரியராக உயர்வு  பெற்றதனை கௌரவிக்கும் நிகழ்வும்   அவர்களது வகுப்பு நண்பர்களான 2003 உயர்தர வகுப்பு2000 O/L & 2003ம் ஆண்டு A/L வகுப்பு  பழைய மாணவர்கள், பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து நடாத்தி இருந்தனர். பேராசிரியர் திரு. M. தணிகைச்செல்வன்  அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர் . அதேவேளை பழைய மாணவர் சங்கத்துடன்  இணைந்து இதனை சிறப்பாக செயல்படுத்திய பழைய  மாணவர்களுக்கு  நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

நேற்றைய நிகழ்வில் கலந்து  அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதுடன் கல்லடி உப்போடை பேச்சியம்மன் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய நிர்வாக  சபையினருக்கும்    விசேட நன்றிகளை தெரிவித்துகொண்டனர் .