வரதன்
ஏறாவூர் நகர சபையின் மக்காமடி வட்டார உறுப்பினர் அஸ்மி அவர்களின் தலைமையில் மாகாண குறித்து ஒதுக்கல் (PSDG) வேலைத்திட்டம் ஊடாக மேற்கொள்ளப்பட உள்ள அபிவிருத்தி வேலைகளின் ஆரம்ப நிகழ்வு (22) திங்கட்கிழமை மாலை ஷாதுலி பள்ளிவாசல் முன்றலில் ஏற்பாட்டு குழு தலைவர் அசனார் கபீரின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது -
ஏறாவூர் நகர சபை கெளரவ தவிசாளர் அல்ஹாஜ் MS நளீம் அவர்களின் ஏற்பாடு மற்றும் வழிகாட்டலில் ஏறாவூர் பெண் பாடசாலை வீதியில் புதிய வடிகாண் அமைத்தல் , பாலம் மற்றும் பாதை சீரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைக்கும் குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான கெளரவ கந்தசாமி பிரபு அவர்களோடு கிழக்கு மாகாண ஆளுனரின் இணைப்பு செயலாளர் அப்துல்லாஹ், ஏறாவூர் நகர சபையின் கெளரவ உறுப்பினர்களான நசீர் (ரஜாய்) , உவைஸ் அல்ஹஃபீல், S .ரகுவரன் உள்ளூராட்சி உதவியாளர் ஆரிப் , வருமான பரிசோதகர் தாரிக் உட்பட நகர சபை அதிகாரிகள் , முன்னாள் பள்ளிவாசல் சம்மேளன தலைவர் அல்ஹாஜ் MLA லத்தீப், அல் அஸ்ஹர் வித்தியாலய அதிபர் SMM நவாஸ் , அஸ்பஹான் ஆசிரியர் இளைஞர் சேவை அதிகாரி இர்ஷாத் அலி , அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் அசிம் உட்பட பிரஜா சக்தி நிருவாகிகள் , முஸ்லிம் காங்கிரசின் மத்திய குழு உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச பிரமுகர்கள் , மற்றும் பள்ளிவாசல்களின் நிருவாகிகள் ,பிரதேச முக்கியஸ்தர்கள் பொது மக்கள் என பலரது பங்கேற்புடன் சிறப்பாக இடம்பெற்றது .
மக்காமடி வட்டார மக்களின் நீண்ட கால தேவைகளை இயன்றவரை நிவர்த்திப்பதில் பங்களிப்பு செய்யும் அனைவருக்கும் மக்கள் சார்பில் நன்றி தெரிவித்த வட்டார உறுப்பினர் அஸ்மி அவர்கள் வட்டார மேம்பாட்டிற்காக மேலும் பல பணிகளுக்கு உரிய நிதிகளை ஒதுக்கீடு செய்து தருமாறு கேட்டுக் கொண்டார் -
கடந்த ஒரு வருடத்தில் வட்டாரத்தில் மேற்கொள்ளப்படும் 2 ஆவது பாரிய வடிகாண் அபிவிருத்தி வேலைத்திட்டமாக இது அமைவதுடன் மேலும் வீதி மற்றும் பால அபிவிருத்தி பணிகளும் விரைவில் ஆரம்பம் ஆக உள்ளதுடன் , ஷாதுலிபள்ளிவாசல் மேல் தள சீமெந்து பூச்சு வேலைகளுக்காக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் MLAM ஹிஸ்புல்லாஹ் அவர்களும் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டை இம்முறை வழங்கி உள்ளதுடன் , தவிசாளர் அல்ஹாஜ் MS நளிம் அவர்களின் தலைமையில் மக்காமடி வட்டார மக்களின் நலன் கருதி 2 வாசிப்பு நிலையங்கள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு இயங்கி , இங்கு அதிகளவு தெரு விளக்குகள் புதிதாக பொருத்தப்பட்டு உள்ளதுடன் உள்ளக ரீதியாக பல்வேறு சீரமைப்பு பணிகள் வட்டார உறுப்பினர் அஸ்மி அவர்களது முயற்சியில் மேற்கொள்ளப்பட்டு உள்ளமை குறிப்பிடத் தக்கது
.jpeg)

.jpeg)

.jpeg)






