இலங்கை மனிதாபிமான மனித உரிமைகள் அமைப்பின் பொதுச் சபை கூட்டமும் விழிப்புணர்வு பயிற்சி பட்டறையும் மட்டக்களப்பில் நடைபெற்றது.















 இலங்கை மனிதாபிமான மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கான  பொதுச்சபை கூட்டமும், விழிப்புணர்வு பயிற்சி பட்டறையும் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் திரு. இளையதம்பி தவசிங்கராஜா அவர்களின் தலைமையின் கீழ் மட்டக்களப்பு புதுநகர் பிரதேசத்தில் அமைந்துள்ள நட்புறவாளர் பாலர் பாடசாலை மண்டபத்தில் 18.11.2025 செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது. 
குறித்த நிகழ்வில் இலங்கை மனிதாபிமான மனித உரிமைகள் அமைப்பின் கௌரவ தலைவர் திரு.சாமரசிறி டடல்லாகே, செயலாளர் திருமதி.சாமலி இறோசனி, கிழக்கு மாகாண பணிப்பாளர் Rev.மோசஸ் ஜோசப், மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் திரு.இளைய தம்பி தவசிங்கராஜா, அமைப்பின் போசகர் Rev. மயில்வாகனம் சுரேஷ் (Bishop) மற்றும் அமைப்பின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இலங்கை மனிதாபிமான மனித உரிமைகள் அமைப்பானது இலங்கையில் நீண்ட காலமாக மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளை இலங்கை முழுவதும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இன்றைய நிகழ்வில் மனிதாபிமான மனித உரிமைகள் அமைப்பில் புதிய அங்கத்தவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதுடன் அவர்களுக்கான சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையும் அமைப்பின் கௌரவ தலைவர் திரு.சாமரசிறி டடல்லாகே அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.