தொலைக்காட்சி மற்றும்
தொலைபேசி பயன்பாட்டால் இளம் பருவத்தினரிடைய நீரிழிவு நோய் அதிகரித்து
வருவதாக அண்மைய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
வெளி விளையாட்டு, நடைப்பயிற்சி இல்லாமல் இருப்பது, இந்த நிலைமையை மேலும் அதிகரிப்பதாக அமைகிறது.
மதுரை அரச மருத்துவமனை நிபுணர்கள் நடத்திய ஆய்வில் இந்த திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளதாகத் தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்றுக்குப் பிறகு நீரிழிவு
நோய் பாதிப்பு கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட
அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.





