சமுர்த்தி சிறுவர் கழக நிர்வாக உறுப்பினர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி .



 



வாழைச்சேனை  கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவினால் சமுர்த்தி சிறுவர் கழக நிர்வாக உறுப்பினர்களுக்கு பிரதேச செயலாளர் ஏ.தாஹிரின்  வழிகாட்டலில் தலைமைத்துவ பயிற்சி  பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.ராஜ்பாபு  பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் உதவி பிரதேச செயலாளர் ஜூமானா ஹஸீன் சமுர்த்தி தலைமை முகாமையாளர் எம்.எல்.ஏ.மஜீத் வங்கி முகாமையாளர் எஸ்.ரவிச்ந்திரன் சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான் பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வுக்கு வளவாளர்களாக ஓட்டமாவடி இளைஞர் வளநிலைய பொறுப்பதிகாரி ஏ.எம்.ஹனீபா மற்றும் உளவுத்துனை அபிவிருத்தி உத்தியோகத்தர் விக்னேஸ்வரி பிரதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 நிகழ்வில் இறுதியில் பயிற்சியில் கலந்து கொண்டோருக்கு சான்றிதழ்களும் சிறுவர் கழகங்களுக்கு இரப்பர் முத்திரிகைளும் வழங்கி வைக்கப்பட்டது.