உயிரிழந்த வயோதிப பெண் ஒருவர் சவப்பெட்டியில் இருந்து மீண்டும் உயிருடன் எழுந்து வந்த சம்பவம் பதிவாகி உள்ளது .

 


தாய்லாந்தில் உள்ள நோந்தபுரி (Nonthaburi) மாகாணத்தில், 2 நாட்களுக்கு முன் இறந்துவிட்டதாக நினைத்த 65 வயது மூதாட்டி, தகனம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் மீண்டும் உயிருடன் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சுமார் இரண்டு ஆண்டுகளாக இவரது உடல்நிலை மோசமாகக் காணப்பட்டுள்ளது. 
 
இந்தநிலையில் 2 நாட்களுக்கு முன்னர் இவரது மூச்சு நின்றதால் அவர் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினர் நம்பியுள்ளனர். 
 
இதனையடுத்து அவரை தகனம் செய்வதற்காகக் கொண்டுசென்றபோது, சவப்பெட்டியை யாரோ தட்டும் சத்தம் கேட்டுள்ளது. 
 
பின்னர் சவப்பெட்டியைத் திறந்தபோது அவர் உயிருடன் இருந்தது தெரியவந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
 இதனையடுத்து குறித்த மூதாட்டி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 இந்தநிலையில் மூதாட்டி மருத்துவமனையில் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.