இளைஞர் ஒருவர் கதிர்காமம் தேவாலயத்திற்குப் பின்னால் உள்ள அரச மரத்தில் ஏறி இடையூறு விளைவித்தது ஏன் ?

 


கதிர்காமம் தேவாலயத்திற்குப் பின்னால் உள்ள அரச மரத்தில் ஏறி இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் இன்று (25) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 
 
கைது செய்யப்பட்ட இளைஞன் குருணாகல் - கெபெல்லேவ பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. 

 
குறித்த இளைஞன் அரச மரத்தில் ஏறி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அநாகரீகமாக நடந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 
 
பின்னர் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் இணைந்து குறித்த இளைஞனை மரத்திலிருந்து கவனமாகக் கீழே இறக்கியதாகச் செய்தியாளர்கள் தெரிவித்தனர். 
 
இருப்பினும், இளைஞன் மரத்திலிருந்து கீழே இறங்கியவுடன், சிவில் பாதுகாப்பு அதிகாரிகளைத் தாக்க முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.