மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் விளையாட்டு வாரத்தை முன்னிட்டு தொற்றாநோயை கட்டுப்படுத்துவதற்கான உடற்பயிற்சி மற்றும் போசாக்கு உணவு பற்றிய செயலமர்வு.

























விளையாட்டு வாரத்தை முன்னிட்டு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்காக தொற்றாநோயை கட்டுப்படுத்துவதற்கான உடற்பயிற்சி மற்றும் போசாக்கு உணவு பற்றிய செயலமர்வு 25/11/2025 நேற்று பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் நிருவாக உத்தியோகத்தர் வி. தவேந்திரன் அவர்களின் வழிகாட்டலில் விடய உத்தியோகத்தர் திருமதி  லாவண்யா தர்சன் அவர்களினாலும் ஒழுங்கு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் வளவாளர்களாக திருமதி எம். அரவிந்தன் உடற்கல்வி விரிவுரையாளர் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிலையம், கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை விசேட வைத்திய நிபுணர் ஜனாப் எம். எஸ். எம். நுசைர் அவர்களும் பங்குபற்றினர்.

இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பரிபூரண தெளிவினை பெற்றுக்கொண்டனர்.

 இது தொற்றாநோய்கள் தொடர்பாகவும் அதனை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் உடல் உள ஆரோக்கியம் ஆரோக்கியமான உணவுப்பழக்கம்  தொடர்பான தெழிவூட்டலை வைத்தியர் அவர்களும்  உடல் உள ஆரோக்கியத்திற்கான உடற்பயிற்சி யினை விரிவுரையாளர் அவர்களும் வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.