முழு விருப்பத்துடன் ஒரு
ஆணுடன் சேர்ந்து வாழ்ந்து, கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்த பின், அந்த
ஆண் மீது பாலியல் வன்கொடுமை வழக்குத் தொடுப்பதை ஏற்க முடியாது என,
இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர் தொடுத்த வழக்கின் தீர்ப்பாக நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஒரு ஆணும், பெண்ணும் பரஸ்பர
உறவிலிருந்துவிட்டு, பிரிந்த பின் ஆண் மீது பாலியல் வன்கொடுமை
குற்றச்சாட்டு சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட வயதைக் கடந்தவர்களுக்கு இடையே, முழு விருப்பத்துடன் உறவு கொள்வதற்குச் சட்டம் அனுமதி வழங்குகிறது.
அதை பயன்படுத்திவிட்டு, பின் கருத்து
வேறுபாடு ஏற்பட்டவுடன் ஆண் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்துவதை பாலியல்
வன்கொடுமை வழக்காகப் பதிவு செய்ய முடியாது என இந்தியாவின் உச்ச நீதிமன்றம்
தீர்ப்பளித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





