சிகிச்சைப் பெறுவதற்கு சென்ற யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வைத்தியர் கைது.

 


கஹதுடுவ பிரதேசத்தில் சிகிச்சைப் பெறுவதற்காக வைத்தியசாலைக்கு சென்ற யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் வைத்தியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

26 வயதுடைய யுவதியே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் 40 வயதுடைய வைத்தியர் ஆவார்.

குறித்த யுவதி சிகிச்சைப் பெறுவதற்காக நவம்பர் 12 ஆம் திகதி கஹதுடுவ பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு சென்றுள்ளார். 

இதன்போது 19 ஆம் திகதி சிகிச்சைக்காக மீண்டும் வைத்தியசாலைக்கு வருமாறு குறித்த யுவதிக்கு சந்தேக நபரான வைத்தியர் கூறியுள்ளார்.  

இதனால் குறித்த யுவதி 19 ஆம் திகதி சிகிச்சைக்காக மீண்டும் வைத்தியசாலைக்கு சென்றுள்ள நிலையில் சந்தேக நபரான வைத்தியரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார்.

பின்னர் குறித்த யுவதி இது தொடர்பில் கஹதுடுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான வைத்தியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.