வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உயிர்மாய்ப்பு என்பது தீர்வல்ல.
இதுவே, மனித உரிமைகள் ஆர்வலர்கள் உள்ளிட்ட சமூக நலன் விரும்பிகளின் கருத்தாக உள்ளது.
இந்த விடயத்தில் சமூகத்தின் பங்களிப்பு,
தனி மனிதனுக்குக் கிடைக்காதபோது, அதன் விளைவாக உயிர்மாய்ப்புகள்
இடம்பெறுவதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இதனைப் பிரதிபலிக்கும் விதத்தில்,
யாழ்ப்பாணம், வட்டுக்கோடை பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் காதல் உறவில் ஏற்பட்ட முறிவு காரணமாக நேற்று (24) உயிர்மாய்ப்பு செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம், வட்டுக்கோடை பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் காதல் உறவில் ஏற்பட்ட முறிவு காரணமாக நேற்று (24) உயிர்மாய்ப்பு செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் வட்டுக்கோடை முல்லை ஆலடி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி என தெரிவிக்கப்படுகிறது.
அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞனை
இரண்டு வருடங்களாகக் காதலித்து வந்ததாகவும், இருவருக்கும் இடையில் முறிவு
ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகி குறித்த மாணவி உயிர்மாய்ப்பு செய்து
கொண்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
உயிரிழந்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக வட்டுக்கோடை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து வட்டுக்கோடை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.





