மட்டக்களப்பு கமக்கார அமைப்புகளின் மாவட்ட அதிகார சபையின் பிரதிநிதிகளுக்கும், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சருக்குமிடையிலான சந்திப்பு...




மட்டக்களப்பு கமக்கார அமைப்புகளின் மாவட்ட அதிகாரசபையின் பிரதிநிதிகளுக்கும், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று  மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இன்று மட்டக்களப்பு  வருகைதந்த பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களை கமக்கார அமைப்புகளின் மாவட்ட அதிகார சபையின் தலைவர் எஸ்.சந்திரமோகன் மற்றும் கமக்கார அமைப்புகளின் மாவட்ட அதிகார சபையின் நிறைவேற்றுகுழு உறுப்பினரும், ஏறாவூர்பற்று பிரதேச சபையின் உறுப்பினருமான த.பிரபாகரன் அவர்களும் சந்தித்துக் காந்துரையாடினர்.

இதன்போது விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பனை உற்பத்தி அதிகார சபை மற்றும் தெங்கு மரமுந்திரிகை செய்கையில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்மந்தமாகக் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக மாவட்டத்தின் பனைவளத்தினை முழுமையாக பயன்படுத்த ஏற்பாடுகளை செய்யும்படி கமக்கார அமைப்புகளின் சார்பில் அதன் பிரதிநிதிகளால் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

குறித்த கோரிக்கை தொடர்பில் செவிமடுத்த பிரதி அமைச்சர்  நிச்சயமாக இக்கோரிக்கைக்கு உதவுவதாகவும், அதற்குரிய ஏற்பாடுகளை செய்யும்படி அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டிருந்தார்.

அத்துடன் மிகுந்த வேலைப்பழுவின் மத்தியிலும் குறித்த சந்திப்பில் இன்முகத்துடன் கலந்துகொண்டு மேலதிக நடவடிக்கைகளை செய்ய உதவிய பிரதி அமைச்சருக்கு கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகளால் நன்றியும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.