சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஒருவர் மனைவியின் கத்திகுத்துக்கு இலக்காகி வைத்திய சாலையில் அனுமதி .

 


மஹியங்கனை - சொரபோர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மனைவி கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த கணவன் மஹியங்கனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த நபர், கிராதுருகோட்ட துணை மாவட்ட தலைமையகத்தில் பணியாற்றும் 43 வயதுடைய சிவில் பாதுகாப்பு அதிகாரி என்றும்,  சொரபோர மீகஹபிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹியங்கனை, சொரபோர மீகஹபிட்டிய பகுதியில் வசிக்கும் மூன்று குழந்தைகளின் தாயான 42 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் தம்பதியினரிடையே ஏற்பட்ட தகராறு அதிகரித்ததை அடுத்து, மனைவி தனது கணவரை கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.