சீரற்ற வானிலையினால் இன்றுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.




 

 சீரற்ற வானிலையினால், கடந்த 17 ஆம் திகதி முதல் இன்று வரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 14 பேர் காணாமல் போயுள்ளனர்.

இச்சம்பவங்களில் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.