நாட்டில் நிலவும் அதிதீவிரமான வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக,
நாளை (28) முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து முன்பள்ளிகளும், முன்பிள்ளை
பருவ அபிவிருத்தி நிலையங்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனர்த்த நிலைமைகள் தணிந்த பின்னரே, முன்பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த
அறிவிப்பை, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் ஊடகப் பிரிவின்
ஊடாக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் வெளியிட்டுள்ளது.





