100 போதை மாத்திரைகளுடன் யுவதி ஒருவர் கைது .

 


சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சபாபதிப்பிள்ளை வீதி, சுன்னாகம் பகுதியில் 100 போதை மாத்திரைகளுடன் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர்  மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.