மட்டக்களப்பு மாவட்டத்தின் சுய தொழில் முயற்சியாளர்களின் வாழ்வின் மேம்பாட்டினை கருத்திற்கொண்டு செயற்பட்டுவரும் மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் உப தலைவி திருமதி. கோகிலா ரஞ்சித்குமார் தேசிய ரீதியில் இடம் பெற்ற சுய தொழில் முயற்சியாளர்களுக்கிடையிலான போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் கண்டியில் இடம்பெற்ற சுயதொழில் முயற்சியாளர்களுக்கிடையிலான போட்டி மற்றும் கண்காட்சி நிகழ்வின் போதே தேசிய ரீதியில் முதலிடத்தினை மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் உப தலைவி திருமதி. கோகிலா ரஞ்சித்குமார் பெற்று சாதனையினை நிலைநாட்டியுள்ளார்.
குறித்த சாதனையினை நிலைநாட்டியமைக்காக மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் சாமஸ்ரீ தேசமான்ய உ.உதயகாந்த் (JP) உள்ளிட்ட சம்மேளனத்தின் உறுப்பினர்களும் இவரை வாழ்த்தி, பாராட்டுக்களை தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.