என். சௌவியதாசன்
கல்முனை மாநகரம் கல்முனை தமிழர்களின் பூர்வீக இருப்பிடம் என்பதனை பறைசாற்றும் விதமாக கல்முனை மாநகரின் மத்தியில் கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனா அமைப்பினால் வருடா வருடம் நடத்தப்பட்டு வரும் தைப்பொங்கல் விழா இவ்வருடமும் பெரு விழாவாக நடத்தப்பட்டது. இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் மற்றும் கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சுகுணன் கலந்து கொண்டதோடு மற்றும் பல விசேட அதிதிகளும் பல்லாயிரக்கணக்கான மக்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். கல்முனை மாநகர சபை சந்தியில் இருந்து அதிதிகள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்துக்கு சென்று தேசியக்கொடி மற்றும் கலாச்சார கொடி மற்றும் இளைஞர் சேனை அமைப்பின் கொடி என்பன ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது. தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கக்கூடிய பல்வேறு கலை கலாச்சார நிகழ்வுகள் நடைபெற்றது. அதோடு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தாமை தொடர்பான வீதி நாடகமும் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டது இங்கு சிறப்பம்சமாக அமைந்தது.
Zee தமிழ் தொலைக்காட்சியிலே பங்கு பற்றி எமது நாட்டுக்கும் எமது பிரதேசத்துக்கும் பெருமை சேர்த்த சபேசன் அவர்களையும் இந்நிகழ்வில் பாராட்டி கௌரவித்தனர்.


























.jpeg)



































