வாகரையில் சிறுவர் பாதுகாப்பு கொள்கை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு.

 


வாகரையில் சிறுவர் பாதுகாப்பு கொள்கை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளானது உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட சிறுவர் பாதுகப்பு உத்தியோகத்தர் திருமதி நிஸா றியாஸ் எற்பாட்டில் வாகரை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (15) இடம் பெற்றது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் 2025 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சி திட்டங்களில் ஒன்றான சிறுவர் பாதுகாப்பு கொள்கை தொடர்பாக அரச நிறுவனங்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகள் நடைபெற்றன.

இந் நிகழ்வில் வலயக்கல்வி பணிமனை , பொலிசார், சுகாதார உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இப் பிரதேசத்தில் பாடசாலை இடை விலகள், இளவயது திருமணம், முறையற்ற தொழில்நுட்ப பாவனை, மற்றும் போதைப்பொருள் பாவனை, பாடசாலை மாணவர்களிடையே பகிடிவதை போன்ற விடயங்கள் ஆராயப்பட்டு பாடசாலை மட்டத்திலும் கிராம மட்டத்திலும் குறைப்பதற்கான வியுகங்களை எதிர்காலத்தில் பிரதேச செயலாளரினூடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.