மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத் திட்டம்.





 






மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத் திட்டம் இடம்பெற்று வருகின்றது. 

அந்த வகையில் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கு நிகழ்வு சித்தாண்டி உதயன்மூலை விநாயகர் வித்தியாலயத்தில் இடம் பெற்றது. 

இந்நிலையில் கிராமம் முழுவதும் வெள்ளத்தால் மூழ்கிய சித்தாண்டி 4 கிராம அதிகாரி பிரிவில் பாதிக்கப்பட்ட 475 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

சுவிஸ்லாந்து சைவநெறிக்கூடம் ஞானலிங்கேஸ்வரர் ஆலயத்தின் ஐந்து இலட்சம் நிதி உதவி மூலம் 220 குடும்பங்களுக்கும், சுவிஸ்லாந்து கடர் நவசக்தி விநாயகர் ஆலயம் மற்றும் அடியார்களின் ஐந்து இரண்டரை இலட்சம் நிதி உதவி மூலம் 110 குடும்பங்களுக்கும், கனடா சாயி இல்லத்தின் ஒன்றரை இலட்சம் நிதி உதவி மூலம் 60 குடும்பங்களுக்கும், சுவிஸ்லாந்து வேன் நாட்டில் வசிக்கும் த.உதயதாஸ் (களுவாஞ்சிக்குடி சக்தி இல்லம்) ஒரு இலட்சம் நிதி உதவி மூலம் 40 குடும்பங்களுக்கும், லண்டன் சிவனருள் பவுன்டேசன் ஒரு இலட்சம் நிதி உதவி மூலம் 45 குடும்பங்களுக்குமாக 475 குடும்பங்களுக்கு அரிசி 5 கிலோ கிராம், சீனி 2 கிலோ கிராம், பருப்பு 1 கிலோ கிராம், கோதுமை மா 01 கிலோ கிராம் வீதம் அடங்கலான பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. 

குறித்த நிவாரண உதவி வழங்கும் நிகழ்வில் கிராம அதிகாரி கோணேஸ்வரன் பிரதீபா, மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் உறுப்பினர்களான க.சோபணன், க.அகிலன், ச.சண்முகேஸ்வரன், பிரதேச சபை உறுப்பினர் வி.வவானந்தன், செஙஐ செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ந.திருநாவுக்கரசு, சமூக சேவையாளர் கோ.ஜெயசுதன், செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நிவாரண பொதிகளை வழங்கி வைத்தனர்.

 

 ந.குகதர்சன்