இந்தியா தருமை ஆதீனம் 27 வது நட்சத்திர குருமணிகள் நட்சத்திர ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் பிரார்த்தனை செய்தி.

 

 


விரைவில் இயல்புநிலை திரும்ப பிரார்த்தனை செய்கிறோம். 

இவ்வாரம் பெருமழை, 
டித்வா புயல்  இலங்கை மக்களை பரிதவிக்க விட்டுள்ளது. இயற்கையின் கோரதாண்டவம் பல உயிர்களை பலிகொண்டும் பலர்காணாமல் போனதும் மிகவும் மனவேதனையளிக்கிறது. இலங்கை மக்கள் எத்தனை எத்தனை இடர்பாடுகளை சோதனைகளை சந்திக்கின்றார்கள். பல உயிர் இழப்புகள். பெருமளவிலான பொருட்சேதம். எமது மக்கள் தமது உறவுகளையும் உடைமைகளையும் இழந்து சொல்லிலடங்காத துயரடைந்துள்ளார்கள். பாதிப்புக்குள்ளான எம்சேய்நாட்டு மக்களுக்கு  ஆறுதலைகூறுகிறோம். மரணித்த அனைவரது ஆத்ம ஈடேற்றத்திற்கு இறைவனை பிரார்த்தனை செய்கிறோம். உடல் உள ரீதியாகவும் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் நலம் பெற வேண்டும். இவர்கள் இத்துயரத்திலிருந்து மீண்டுவர இறைவனை பிரார்த்தனை  செய்கிறோம். 
சேய் நாடாகிய இலங்கை மக்களுக்கு இந்திய அரசு உடனடியாக உதவி புரிந்தும் மீட்புப்பணியிலும் களப்பணியாற்றுவது மனதிற்கு ஆறுதலாக உள்ளது. பாரத அரசிற்கு இத்தருண உதவிக்காக நன்றியுடன் பாராட்டி வாழ்த்துகிறோம். 
தமிழகத்திலும்  பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய பயிர்கள்  மூழ்கியுள்ளன. நிவாரணம் அரசு அளித்து ஆதரிக்கவேண்டும்.

ஆதிபௌதிகம்  ஆதிஆத்மிகம் ஆதிதெய்வீகத்திலிருந்து உலகிலுள்ள உயிர்களை  காத்திட இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மேலும் இணைப்பினை பார்க்கவும். தயவுடன் உயரிய உரிய செயலாக்கத்தினை எதிர்பார்க்கிறோம். தங்களின் அன்புக்கினிய ஊடகத்தில் செய்தியில் நாளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்