ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் ஒரு அங்கமாக டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சி திட்டம் நாடெங்கிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது ,அந்த வகையில் மட்டக்களப்பு இருதயபுரம்
சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி உத்தியோகத்தர்களினாலும் 12கிராம சேவகர் பிரிவு பொதுமக்களினாலும் மேற்கொள்ளப்படும் சிரமதான நிகழ்வானது 04.12.2025 வியாழக்கிழமை இன்று எமது பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இருதயபுரம் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் முகாமையாளர் திருமதி வலன்ரைன் பிரதீஸ்குமார் சாமினி அவர்களின் தலையில் நடைபெற்றது
நாட்டால் ஏற்பட்ட பேரிடலிருந்து மீண்ட எமது கிராம வாழ் மக்களின் நலன் கருதி இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இயற்கையின் சீற்றத்தில் இருந்து மீண்ட எமது மக்களின் இயல்பு வாழ்க்கையினை டெங்கு உயிர் கொல்லி காவு கொள்ள இடமளிக்காதபடிக்கு இச் சிரமதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
நமது வீட்டையும் நமது வீதிகளையும் சுற்றாடலையும் தூய்மையாக வைத்திருப்பது எமது தலையாய கடமையாகும் அது எமக்கும் எமது எதிர்கால சந்ததியினருக்கும் வாழ்வளிக்கும்.
வங்கி உத்தியோகத்தர்கள் பொது மக்களின் வீட்டிற்கு வருகை தந்த போது வரவேற்று ஒத்துழைப்பை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது


.jpeg)
















.jpeg)







