அண்மையில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கோரளைபற்று வடக்கு வாகரை பிரதேச செயலக பிரிவினை சேர்ந்த
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான முதற்கட்ட நிவாரண பொருட்களை தமிழ் வைத்தியர் நிபுணர் சங்கம் லண்டன் அமைப்பின் போசகர் வைத்திய கலாநிதி திருமதி காந்தா நிரஞ்சன் அவர்களின் நிதி உதவியின் கீழ் கோரளைபற்று வடக்கு வாகரை பிரதேச செயளாலர் திருமதி. அமலினி கார்த்தீபன் அவர்களிடம் இன்று புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் எந்திரி. தயாளசீலன் மயூரன், கோரளைபற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
.jpeg)
.jpeg)

.jpeg)






