மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் புதிய மாவட்ட ஆணையாளராக அழகையா நிஷாந்தன் தெரிவு.










மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் புதிய மாவட்ட ஆணையாளர் பதவியேற்பு நேற்று மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது.

மாவட்ட சாரணர் சங்கத்தின் தலைமையக ஆணையாளரும் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளருமான பொ.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவி மாவட்ட ஆணையர்கள், மாவட்ட சாரணர் தலைவர்கள், சாரணர் தலைவர்கள் மற்றும் மூத்த சாரணர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் உதவி மாவட்ட ஆணையாளராக கடைமையேற்றிருந்த அழகையா நிஷாந்தன் மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் புதிய மாவட்ட ஆணையாளராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார் அதனைத்தொடர்ந்து புதிய பிரதி மாவட்ட ஆணையாளராக எம்.சந்திரசுசர்மன் மாவட்ட ஆணையாளரால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து மாவட்ட சாரணர் பதிவு புத்தகம் புதிய மாவட்ட ஆணையாளரிடம் சம்பிரதாயபூர்வமாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.