மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் இலங்கை நாட்டுக்கான பிரதிநிதி அஞ்சலிக் அப்பிரோக்ஸ் அவர்களுக்கும் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இடையில் சிநேக பூர்வ கலந்துரையாடல் நேற்று (15) புதிய மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.
இக் கலந்துரையாடலின் போது மாவட்டத்தில் செஞ்சிலுவை சங்கத்தின் செயற்பாடுகளை மேம்படுத்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
மாவட்டத்தில் அனர்த்தங்கள் ஏற்படும் நேரங்களில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால் முதலுதவிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சேவைகளை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ் கலந்துரையாடலின் போது செல்வராஜ் நவராஜ் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.





