மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பெரும்போக செய்கைக்கான உரம் வழங்கள் தொடர்பான கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் தலைமையில் தேசிய உரக்கூட்டுத்தாபன உதவிப் பணிப்பாளர் கே.எல்.எம் சிராஜீன் எற்பாட்டில் புதிய மாவட்ட செயலகத்தில் நேற்று (15) இடம் பெற்றது.
விவசாய மாவட்டமான மட்டக்களப்பில் பெரும் போக செய்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மாவட்டத்திற்கு தேவையான யூரியா 15054.74 மெற்றிக்தொன் , TSP 3394 மெற்றிக்தொன் ,MOP 4138.17 மெற்றிக்தொன்களைப் பெற்றுக்கொள்வதற்கு தனியார் உரக் கம்பனியினருடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டன.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் விவசாயிகளுக்கு உரம் தடைப்படாது வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனிர், கமநல சேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் ஜேகன்நாத், விவசாய அமைச்சினால் நியமிக்கப்பட்ட மாவட்ட பிரதிநிதி கிருஸ்ணகோபால் திலகநாதன், விவசாய அமைப்புத்தலைவர்கள், தனியார் உரக் கம்பனி பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது மாவட்டத்தில் செயற்கையாக உரப்பற்றாக்குறை ஏற்படுவதை தடுப்பதற்கு தேவையான உயர் மட்ட கலந்துரையாடல் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.