9 ஏ சித்தி பெற்ற மாணவிக்கு தனது பிறந்த நாளில் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை வழங்கிய இளம் தொழிலதிபர்

 



 
9 ஏ சித்தி பெற்று 94 வருடங்களின் பின்னர்  சாதனை நிலை நாட்டிய முகம்மட் நிஸ்பர் பாத்திமா அனபா என்ற மாணவிக்கு  பிரபல சமூக சேவகரும்  இளம் தொழிலதிபருமான  மஹ்மூத் மாஜித் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலையை வழங்கி கெளரவித்தார்.
புதன்கிழமை(15) இரவு கல்முனை மாப்பிள்ளை விருந்து தனியார் விடுதியில்  இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர்  லசந்த களு ஆராய்ச்சி  முன்னிலையில்  இக்காசோலை குறித்த மாணவிக்கு வழங்கி வைக்கப்பட்டது.

பிரபல சமூக சேவகரும்  இளம் தொழிலதிபருமான  மஹ்மூத் மாஜித் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிக்கமைய இத்திட்டம் அவரது பிறந்த நாளான அன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன்  இன்னும் ஆறு வருடங்களுக்கு இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த மாணவி அம்பாறை மாவட்டம் கல்மனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனை கமு அல்-அக்ஸா   மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று கடந்த 2024ம் ஆண்டில் நடைபெற்ற க.பொ.த (சாதாரணதர) பரீட்சைக்கு தோற்றி 9 ஏ சித்திகளை பெற்றவராவார்.

மேலும் குறித்த பாடசாலையில்   க.பொ.த (சாதாரணதர) பரீட்சைக்கு தோற்றி ஒவ்வொரு வருடமும் 9 ஏ சித்தி பெறும் மாணவருக்கு 50 ஆயிரம் ரூபா பணப் பரிசு வழங்குவதாக எம்.எச்.கே.மார்க்கட்டிங் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரும் இளம் தொழிலதிபருமான  மஹ்மூத் மாஜித் வாக்குறுதியளித்திருந்தார்.

குறித்த வாக்குறுதிக்கமைய 2024ம் ஆண்டில் நடைபெற்ற பரீட்சையில் 9 ஏ சித்திகளை பெற்ற மாணவி மெளலவி முகம்மது  நிஸ்பர் (ஹாமி) ஆசிரியரின்  புதல்வி பாத்திமா அனபா என்பவரிற்கு தனது பிறந்த நாளான அன்று  தான் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலையை வழங்கி கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் நற்பிட்டிமுனை அல் - அக்ஸா மத்திய மகா வித்தியாலய அதிபர் எம்.எல்.பதியுதீன் மற்றும் ஆசிரியர்கள்  ஊடகவியலாளர்கள் உட்பட  மேலும் பலர் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் எதிர்கால கல்வி வளர்ச்சியிலும்  முன்னேற்றத்திலும் இவ்வாறான உந்து சக்தியான வார்த்தைகள் இளம் சமூகத்தின் கல்வியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எதுவித ஐயமுமில்லை என  பிரபல சமூக சேவகரும்  இளம் தொழிலதிபருமான  மஹ்மூத் மாஜித் தெரிவித்தார்.

இத்திட்டம் 10 வருடங்களுக்கு செயற்படுத்தப்படும் திட்டம் என்பதுடன்   பிரபல சமூக சேவகரும்  இளம் தொழிலதிபருமான  மஹ்மூத் மாஜித்தினால்  வழங்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில்  அவரது பிறந்த நாளில்  இடம்பற்ற நிகழ்வு நான்காவது வருடத்திற்குரியது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.