மட்/மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய கல்விச் சமூகத்தின் ஒழுங்குபடுத்தலில் இந்தியா - தமிழ்நாடு வளவாளர் பங்குபற்றிய செயலமர்வு

 













#கதிரவன் சமூக அபிவிருத்தி  நிறுவனம், அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனம் (SCSDO)  இணைந்து மட்/மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய கல்விச் சமூகத்தின் ஒழுங்குபடுத்தலில்.....

வலயக் கல்விப் பணிப்பாளர் திரு தினகரன் ரவி அவர்களின் வழிப்படுதலில்....

பாடசாலை அதிபர் திரு அ.குலேந்திரராசா அவர்களின் தலைமையில்...

#அறிவியல் மாற்றம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான செயலமர்வு 28.08.2025 ஆம் திகதி கண்ணகி மகா வித்தியாலயத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வளவாளராக இந்தியா தமிழ்நாடு ரோபோ விஞ்ஞானி திரு அ. கார்த்திகேயன் ஐயா அவர்களும், அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவன இணைப்பாளர் யாழ்ப்பாணம் திரு லொரன்ஸோ ஐயா அவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

மண்முனைப்பற்று கோட்டக் கல்வி பணிப்பாளர் திரு சீ.தில்லைநாதன்,

பாடசாலை மேம்பாட்டுத்  திட்ட இணைப்பாளர் திரு ப. மதியழகன்,

கதிரவன் நிறுவனங்களின் தலைவர் கதிரவன் த.இன்பராசா,

கதிரவன் பட்டிமன்றப் பேரவை உப தலைவர் சோலையூரான் ஆ.தனுஸ்கரன்,

 நகைச்சுவை நடிகர் பூபாலன், மற்றும் ஆசிரியர்கள்,  நலன்விரும்பிகள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.