பாராளுமன்ற ஒத்திவைக்கும் பிரேரணை நேரத்தில் 05.08.2025 , முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள், பிரதேச செயலகங்களுக்கான எல்லை நிர்ணயத்தைக் கோரி தனிநபர் பிரேரணையை முன்வைத்தபோது நான் ஆற்றிய உரை, இரு சமூகங்களுக்கிடையே குழப்பங்களை உருவாக்கும் அரசியல் பாணி இனிமேல் அனுமதிக்கப்பட முடியாது.
இது சமூக மட்டத்தில் பிரச்சினையாக மாறியதற்குப் பொறுப்பு தேசிய மக்கள் சக்தியின் ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்கள்தான் .
அவர்கள் மூவரும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார்கள். இது அரசாங்கத்தினுள்ளே இருந்து, அரசாங்கத்தையே எதிர்த்து நடக்கும் ஒரு வகையான ஆர்ப்பாட்டம்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் இரு சமூகங்களும் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதற்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சில இடங்களில் முஸ்லிம் காங்கிரஸுடன் ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளது. கடந்த காலங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் ஒருவரை ஒருவர் எதிர்த்து அரசியல் செய்து வந்தனர். இது இனிமேல் மீண்டும் நடக்கக்கூடாது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக தமிழ் மக்களுக்கும் பிரச்சினை உள்ளது. ஆனால் இதைப்பற்றி பேசும் முஸ்லிம் சகோதரர்கள் அந்த பிரச்சினையை மறுக்கின்றனர். முஸ்லிம் மக்கள் எல்லைப் பிரச்சினையை எழுப்பும் போது, தமிழ் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும். ஆனால், இந்தமுறையும் உள்ளூராட்சி சபைகளில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும் முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து ஆட்சி அமைத்துள்ளனர். அந்த ஒற்றுமை தொடர வேண்டும்.