உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தலும், உணவு கையாள்தல் தொடர்பான விழிப்புணர்வு வழிகாட்டல் நிகழ்வு - 2026.03.18














   









செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிக்குட்பட்ட உணவக உரிமையாளர்,உணவு கையாளுபவர்களுக்கான விழிப்புனர்வு வழிகாட்டல் நிகழ்வு ஒன்று 
  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்   வைத்திய கலாநிதி Dr.  ஆர். முரளீஸ்வரன் அவர்களின்  வழிகாட்டலில்
செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி Dr. M. கீர்த்திகா தலமையில்
  பிரதேச சபை தவிசாளர் , மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர், பொதுச்சுகாதார பரிசோதகர்கள்           
 உணவக உரிமையாளர்கள், உணவு கையாளுபவர்கள் கலந்து கொண்டிருந்தனர். 
இதன்போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  அவர்களினால்
சுகாதார நடைமுறைகள், உணவு சேமிப்பு, சட்டப் பொறுப்புகள் மற்றும் அனுபவங்கள் சார்ந்து  விளக்கமளிக்க பட்டதுடன் , உணவகங்களில்   உணவின் தரம் சம்மந்தமாக மக்கள்  முறைப்பாடளிக்கும்  தொலை பேசி இலக்கம் அடங்கிய sticker  ஒவ்வொரு உணவகங்களிலும்  இருக்க வேண்டும்  என தெளிவுபடுத்தப் பட்டதுடன், 

   உணவை கையாளுதலில் உள்ள நடைமுறை சவால்கள், சுகாதார,   மற்றும் சட்டரீதியான விளக்கங்களுடன்  தங்கள் கேள்விகளைக் கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக  அமைந்தது.

இவ் விழிப்புணர்வு நிகழ்ச்சி, உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதிலும், பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பை மேலும் புதுப்பிப்பிக்க குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.