கௌரவ ஐனாதிபதியின் பங்குபற்றுதலுடன் சமூக சேவைகள் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கிணங்க மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கலாச்சார நிகழ்ச்சியானது நெலும்புக்கன மண்டபத்தில் (05) நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம்.ஹேமந்த குமார அவர்களின் வழிகாட்டலுக்கமைவாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ஒன்பது மாகாணங்களில் முதலாம் இடத்தை பெற்ற அணிகள் மற்றும் இலங்கையில் உள்ள 13 தொழில் பயிற்சி நிலையங்களும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் ஒன்பது மாகாணங்களில் ஒரு மாவட்டமாக திருகோணமலை மாவட்டமும் கலந்து சிறப்பித்ததுடன் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டனர்.
இதன்போது திருகோணமலை மாவட்ட சமூக சேவைகள் ஒருங்கிணைப்பாளர் த.பிரணவன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.