மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்த அபாயக் குறைப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்த அபாயக் குறைப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலானது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஏ.எஸ்.எம் சியாத் தலைமையில் அனர்த்த முகாமைத்து பிரதிப்பணிப்பாளர் சான் பத்திரன பங்குபற்றுதலுடன் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (05) இடம் பெற்றது.

இதன் போது மாவட்டத்தில் அனர்த்த அபாயங்களான வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி, வெடிப்பு (CBRNE) போன்ற வற்றினால் ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்கான ஆரம்ப கட்ட தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.

மேலும் இவற்றினால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து விடுபடுவதற்கான நடவடிக்கைகள், மற்றும் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கான குழு இன்று அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் முப்படையினர், பிரதி மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், வைத்தியர்கள், துறை சார் நிபுணர்கள் ,தெரிவு செய்யப்பட்ட நிறுவன தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.