கோயிலுக்கு செல்லவிடாததால் 12 வயது சிறுவன் நேற்று (08) உயிர்மாய்த்துடுள்ளான்.
மட்டக்களப்பு, தாந்தாமலை கோயிலுக்குச் செல்வதற்காக பெற்றோரிடம் சிறுவன் கேட்டுக்கொண்ட நிலையில், சனிக்கிழமை தீர்த்த உற்சவத்துக்கு செல்வதாகவும், அப்போது போகலாம் எனவும் பெற்றோர் பதிலளித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த 12 வயது சிறுவன் உயிர்மாய்த்துள்ளான்.
இதனையடுத்து சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.