ஏறாவூர் நகர பிரதேச செயலக இளைஞர் கழக சம்மேளனத்தின் பொதுச்சபைக் கூட்டமும் புதிய நிருவாகத் தெரிவும்.









 

ஏறாவூர் நகர பிரதேச செயலக இளைஞர் கழக சம்மேளனத்தின் பொதுச்சபைக்கூட்டம், புதிய நிருவாகத் தெரிவும் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எச் முஸம்மில் அவர்களின் தலைமையில் ஏறாவூர் நகர பிரதேச செயலக இளைஞர் கழக உத்தியோகத்தர் A.W.இர்ஷாத் அலி அவர்களின் ஒழுங்கமைப்பில்  இன்று பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது

இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களும், ஏறாவூர் நகரசபை  தவிசாளர் அல்ஹாஜ் எம்.எஸ். நழீம், நகரசபை உறுப்பினர் ஏ.எம். அஸ்மி, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் நிசாந்தி அருள் மொழி, ஏறாவூர் பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சரூக்  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் முகாமையாளர் நிரோஷன், தேசிய மக்கள் சக்தி ஏறாவூர் செயற்பாட்டாளர் ரக்கீஸ்,  உட்பட 15 ஏறாவூர் பிரதேச இளைஞர் கழகங்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வில் 15 ஏறாவூர் பிரதேச  இளைஞர் கழகங்களில் இருந்தும் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எம்.யூ.எம்.முஜாஹித்
(ஏறாவூர்)