மட்டக்களப்பில் இயக்கிவரும் அமெரிக்க சர்வதேச பல்கலைக்கழகத்தில் கல்முனை றோட்டரிக்கழகத்தின்
அனுசரணையில்
வசதி குறைந்த பதினேழு மாணவர்களுக்கு இலவசமாக இரண்டு கற்கை நெறிகள் நேற்று ஆரம்பித்துவைக்கப்பட்டன.
2025/26 ம் வருட புதிய தலைவர் ரொட்டரியன் இ. தரணிதரனின் வழிகாட்டலில் நடைபெறும்
ஆங்கில
டிப்ளோமா ( Diploma in English), மற்றும் அடிப்படை தகவல் தொழில் நுட்ப
கற்கை நெறி (Basic (Information Tecnology)ஆகியவற்றிற்கு கன்பேரா
றோட்டரிக்கழகம், அவுஸ்திரேலிய, கன்பேரா தமிழ்ச் சங்கம் என்பன
(680,000/-)நிதிவழங்குகின்றன.
வைபவரீதியாக
ஆரம்பித்து வைக்கப்பட்ட இந் நிகழ்வில் கழகத்தின் செயலாளர் ரோட்டரியன் மு.
சிவபாதசுந்தரம், ரோட்டரியன் க. குகதாஸ் ,கழக பயிற்றுவிப்பாளர் ,
பல்கலைக்கழக விரிவுரையாளர் எஸ், ஜெபகுமார், முகாமையாளர் -அகமட் சப்ரி
மற்றும் உத்தியோகத்தர்களும் பங்குபற்றினர்,
( வி.ரி.சகாதேவராஜா)