சூழல் உணர்வுமிக்க சமூக பொறுப்புணர்வுடன் கூடிய கல்விச்சுற்றாடலை நிர்மாணித்தல் எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு விவேகானந்த மகளிர் கல்லூரியில் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டது .
இன்று காலை2025.07.09 மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின .ஆரம்ப நிகழ்வாக இறைவணக்கம் இடம் பெற்றது அதனைத்தொடர்ந்து கல்லூரி முதல்வரால் தேசிய கொடியும் , உதவி முதல்வரால் பாடசாலை கொடியும் ஏற்றப்பட்டது .
அதன் பின்னர் மாணவிகளால் தேசிய கீதம் இசைக்கப்பட்டது .
உதவி முதல்வரால் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கருப்பொருள் பற்றி மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது .
பின்னர் பாடசாலை வளாகம் சுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து பாடசாலை வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டன , மேற்படி சிரமதானமானது இரண்டு மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்டது .
தரம்4; மாணவர்களினால் பாடசாலை வளாகத்தை அழகு படுத்தும் நோக்கத்துடன் மரநடுகை இடம் பெற்றது .
இடைவேளையை தொடர்ந்து உணவும் ஆரோக்கியமும் எனும் தலைப்பில் வீதிநாடகம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது .
ஆரோக்கிய வாழ்வுக்கு உகந்த உணவு எனும் தலைப்பில் பொது சுகாதார பரிசோதகர் கஜானனன் அவர்களினால் விளக்க உரை வழங்கப்பட்டது .
யோகா பயிற்றுவிப்பாளர் ஸ்ரீதரன் அவர்களினால் தரம் 6,7 மாணவர்களுக்கு கலாச்சார மண்டபத்தில் அடிப்படை யோகா பயிற்சி முன்னெடுக்கப்பட்டது .சமூக விழுமியங்கள் எனும் தலைப்பில் மாவட்ட உளசமூக உத்தியோகத்தர் A. பிரபாகர் அவர்களினால் மாணவர்களுடன் சிறப்பான கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது .
உப அதிபரின் நன்றி உரையோடு கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நிறைவடைந்தது .