மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய ஆங்கில தின வலயமட்டப் போட்டிகள் வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்றன.

 


மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய ஆங்கில தின வலயமட்டப் போட்டிகள் 07.07.2025) திங்கட்கிழமை வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்றன.

வலய ஆங்கிலபாட இணைப்பாளர், ஆசிரிய ஆலோசகர் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன், வை. சி. சஜீவன், திருமதி தே. உதயகரன், உதவிக்கல்வி பணிப்பாளர்களான க. ரகுகரன், திருமதி. உ. விவேகானந்தன், மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் மூ. உதயகுமாரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு, ஏறாவூர் பற்று கோட்டத்திற்குட்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது மாவட்ட மட்ட போட்டிக்கு தகுதியான மாணவர்களை தயார்படுத்தும் பொருட்டு பல்வேறான தனி, குழு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்கு நடுவர்களாக மட்டக்களப்பு கல்வி வலயம், கல்குடா கல்வி வலயங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.