இனிய பாரதியின் சாரதி செழியன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

 


 

 இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஸ்பகுமாரின் சாரதியாக பணியாற்றிய செழியன் என்று அழைக்கப்படும் அழகரட்ணம் யுவராஜ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட கொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள், சட்டவிரோத துப்பாக்கிப் பாவனை, கப்பம் பெற்றமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஸ்பகுமார் உள்ளிட்ட இருவர் நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.