மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் நட்புறவு கடினப்பத்து போட்டி நிகழ்வில் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமாரகமகே பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார் ..

 


மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் நட்புறவு கடினப்பத்து போட்டிகளானது கழக தலைவர் பேரின்பராஜா சடாட்சரராஜா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமாரகமகே மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தனர்.

கோட்டைமுனை புற்தரையிலான கடினப்பத்து கிரிக்கட் மைதானத்தினை இங்குள்ள கடினப்பந்து விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தி தமது விளையாட்டுத்திறமைகளை வெளிக்காட்டுவதற்கும் இங்குள்ள கழக வீரர்களின் நட்புறவை மேம்படுத்துவதற்குமான விளையாட்டுப் போட்டிகள் இடம் பெற்றன.

இதன் போது பிரசித்தி பெற்ற 10 விளையாட்டுக்கழகங்கள் தமது விளையாட்டு திறமையினை வெளிக்காட்டியிருந்தனர்.

வட கிழக்கு மாகாணத்தில் புற்தரையிலான கடினப்பத்து கிரிக்கட் மைதானம் கோட்டைமுனை விளையாட்டுக் கிராமத்தில் அமைந்துள்ளது .

எமது பிரதேசத்தில் உள்ள இளைஞர்களை சிறந்த கிரிக்கட் வீரர்களாக மாற்றுவதற்கும் அவர்களை தேசிய கிரிக்கட் நீரோட்டத்தில் இணைப்பதற்கும் இவ் கழகம் சிறப்பாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் கோட்டை முனை விளையாட்டுக் கழக பணிப்பாளர்களான எஸ்.ரஞ்சன், ஏ.சிவநாதன், கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் தலைவர் கே. சதிசன், செயலாளர் வி. வசந்த மோகன் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.