வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் இன்றைய தினம் 2025.07.05 மாகாண மட்ட தமிழ் தின விவாத போட்டியில் மட்டக்களப்பபு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை மாணவர்கள் வெற்றிபெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
சிவானந்தா தேசிய பாடசாலை மாணவர்களான செல்வன் ம. சதுஷன் , செல்வன் பி. அகிலேஷ், செல்வன் ஜோ. யோபு , செல்வன் உ. பிரபஞ்சன், செல்வன் லக்சயன்* ஆகிய ஐவரும் தமிழ் தின விவாத போட்டியில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் திறம்பட விவாத போட்டியில் பங்கு பற்றி தெரிவு செய்யப்படுவதற்கு காரண கர்த்தாக்களாக திறம்பட செயலாற்றிய விவாத பொறுப்பாசிரியர்களுக்கு பாடசாலை சமூகம் தமது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டது .
இந்த மாணவர்கள் தேசிய மட்டத்திலும் வெற்றிபெற்று எமது மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் ,பாடசாலைக்கும் பெருமை சேர்ப்பார்கள் என்று பாடசாலை சமூகம் தமது நம்பிக்கையை வெளிப்படுத்தி இருந்தது .