மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக வளாகத்தில் அமைந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கும் பழந்தோட்ட பிள்ளையார் ஆலய வருடாந்த சங்காபிஷேக பூசை நிகழ்வுகளானது பிரதேச செயலாளர் திரு உ. உதயஶ்ரீதர் அவர்களின் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் இன்றைய தினம் (12.07.2025) மிகவும்
சிறப்பான முறையில் இடம்பெற்றது.
இதன் போது பிரதேச செயலக திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்களால் மாடித் தோட்டத்தில் நடுகை செய்யப்பட்ட பாரம்பரிய நெல் இன அறுவடையும் சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து உத்தியோகத்தர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட அன்னதான நிகழ்வும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.