மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒசுசல அரச
மருந்தகங்களை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்
இராசமாணிக்கம் சாணக்கியன், சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்சவிடம் இன்று
கோரிக்கை விடுத்தார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் வாய்மொழி
மூல வினாவிற்கான சந்தர்ப்பத்தின் போதே, இராசமாணிக்கம் சாணக்கியன் இந்த
கோரிக்கையை முன்வைத்தார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கையை
ஏற்றுக் கொண்ட சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ச, உரிய பொறிமுறையின் கீழ்
ஒசுசல நிறுவப்படும் எனக் கூறினார்.
அதிக தேவைகள் உள்ள பகுதிகள் அடையாளம்
காணப்பட்டு, அதற்கு ஏற்றால் போல் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என
அமைச்சர் தெரிவித்தார்.